Thursday, February 18, 2010




போட்டோஷாப் பாடம்-14 Pattern Images
இன்றைய பாடத்தில் Pattern image பற்றி பார்க்கலாம். Pattern image ஆனது ஒரு படத்தில் குறிப்பிட்ட இடத்தை – குறிப்பிட்ட நபரை தேர்வு செய்து அதை அதிக எண்ணி்க்கையில் சுலபமாக நிரப்ப நமக்கு உதவுகின்றது.அதற்கு நாம் மானையும் மயிலையும் எடுத்துக்கொள்ளலாம். முதலில் மான் படத்தை எடுத்துக் கொண்டுள்ளேன்.

இதன் image அளவு அகலத்தில்

6.667 மற்றும் உயரத்தில்

8.889 அங்குலத்தில் உள்ளது.

இதில் அதன் முகம் மட்டும்

நான் தேர்வு செய்துள்ளேன்.

முன்பே பாடத்தில் சொன்னது போல் மார்க்யு டூலால் கட் செய்து கொள்ளுங்கள். பின்னர் Ctrl+N-ஐ அழுத்தி பின் Enter தட்டுங்கள். உங்களுக்கு புதிய விண்டோ ஓப்பன் ஆகியிருக்கும். அதில் கட் செய்த மானை பேஸ்ட் செய்யுங்கள்.

உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும். இனி பழைய படத்தை முடி விடுங்கள். இப்போது ஸ்கீரினில் தலை மட்டும் உள்ள மான கிடைக்கும். அதன் இமேஜ் அளவை அகலம் 2 அங்குலம் உயரம் 3 அங்குலம் என மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு கீழ் கண்டவாறு படம் கிடைக்கும்.

இதை அப்படியே விட்டுவிட்டு இப்போது மேல்புறம் உள்ள Edit கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்  ஆகும்.

அதில் உள்ள Define Pattern கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

ஓகே கொடுங்கள். இப்போது நீங்கள் கொடுத்துள்ள Standard அளவின் படி புதிய விண்டோ ஓப்பன் செய்யுங்கள். நான் அகலத்தில் 10 அங்குலமும் உயரத்தில் 12 அங்குலமும் வைத்து புதிய விண்டோ ஓப்பன் செய்துள்ளேன். இனி நீங்கள் Shift + F5 அழுத்துங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் Use எதிரில்உள்ள கட்டத்தில் Pattern தேர்வு செய்து பின் Custom Pattern எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு மேலே உள்ளவாறு ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் தேர்வு செய்த மானின் படம் முதலில் இருக்கும். அந்த படத்தை தேர்வு செய்து ஓ,கே. கொடுங்கள். கண் இமைக்கும் நொடியில் என்ன நடக்கின்றது என பாருங்கள்.

ஒரு மான் பாருங்கள் - 20 மானாக வந்து விட்டது. இதைப்போல்
இந்த மயிலை பாருங்கள்.

மயிலின் அளவு கீழே கொடுத்துள்ளேன்.

இதில் மயிலின் முகம் மட்டும் கட் செய்துள்ளேன்.

வேண்டிய அளவிற்கு படத்தின் இமேஜை

குறைத்துள்ளேன். படம் கீழே..

இதையும் Edit -Define Pattern -O.K. கொடுத்தேன். புதிய விண்டோ ஓப்பன் செய்தேன். அதில் மானை நிரப்பியவாறு மயிலையும் நிரப்பினேன். படத்தை பாருங்கள்.

பாடத்தை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.





எம்.எஸ்.எக்ஸலில் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் நாட்களின் வித்தியாசத்தை ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழிப்பதன் மூலம் இலகுவாகக் கணித்து விடலாம். எனினும் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் வித்தியாசத்தை வருடங்களில் மாதங்களில் நாட்களில் எப்படி கண்டறிவது? அதற்கும் ஒரு இலகுவான வழி முறை எக்ஸ்லில் உள்ளது.. 

இதற்கு எக்ஸலில் உள்ள Datedif எனும் பங்க்ஸ்ன் (function) பயன் படுத்தப்படுகிறது. இந்த Datedif எனும் பங்ஸனை = Datedif (திகதி1, திகதி2, விடை காண வேண்டிய வடிவம்) {=DATEDIF(Date1, Date2, OutputRequirement)} எனும் ஒழுங்கிலேயே வழங்க வேண்டும். OutputRequirement எனுமிடத்தில் மேற்கோள் குறிகளுக்கிடையே "Y" என வழங்கும் போது வருட வித்தியாசத்தையும் “M” என வழங்கும்போது மாதங்களின் வித்திய்சாத்தையும் “D” என்பது நாட்களின் வித்தியாசத்தையும் தரும். இங்கு திகதி1 ஐ விட திகதி2 பெரிதாக இருக்க வெண்டும் என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்..

உதாரணமாக 8/8/1990 எனும் திகதிக்கும் 13/05/2008 எனும் திகதிக்கும் இடையில் எத்தனை வருடங்கள் உள்ளன? எத்தனை நாட்கள் உள்ளன? எத்தனை மாதங்கள் உள்ளன எனக் கணக்கிட முதலில் எக்ஸல வர்க் சீட்டில் B3 எனும் செல்லில் 08/08/1990 எனும் திகதியையும் B4 எனும் செல்லில் 13/05/2008 எனும் திகதியையும் உள்ளீடு செய்யுங்கள்.. திகதியை உள்ளீடு செய்யும்போது உங்கள் கணினியில் திகதி உள்ளீடு செய்யும் வடிவத்தையும் (Date format) கவனத்திற் கொள்ள மறந்து விடாதீர்கள் அனேகமாக் விண்டோஸில் MM/DD/YYYY (மாதம் /திகதி/வருடம்) எனும் திகதி வடிவமே இயல்பு நிலையில் இருக்கும்
அடுத்து இரண்டு திகதிகளுக்கிடையிலுள்ள வருட வித்தியாசத்தைக் கண்டறிய B6 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,"Y") எனும் சமன்பாட்டை டைப் செய்யுங்கள். விடையாக 17 (வருடங்கள்) வரக் காணலாம்.

அதேபோல் இரண்டு திகதிகளுக்கிடையேயுள்ள மாதங்களின் எண்ணிக்கையைக் காண B7 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,"M") எனவும் நாட்களின் வித்தியாசத்தைக் காண B8 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,"D") எனவும் வழங்குங்கள்.
இன்னும் சற்று மாறுதலாக இன்றைய திகதிக்கு உங்கள் வயது என்ன என்பதைக் கண்டறிய வேண்டுமானால் மேற் சொன்ன சமன்பாட்டில் சிறிய மாற்றத்தைச் செய்ய வெண்டும். .

உதாரணமாக B2 எனும் செல்லில் உங்கள் பிறந்த திகதியையும் B3 எனும் செல்லில் இன்றைய திகதியையும் டைப் செய்யுங்கள். B5 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,"Y") எனும் சமன் பாட்டை வழங்கும் போது வருட வித்தியாசம் கிடைக்கும். அவ்வாறே B6 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,"YM") என வழங்குங்கள். வருடங்கள் நீங்களாக மாத வித்தியாசம் கிடைக்கும். B7 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,"MD") எனும் சமன்பாட்டை வழங்க வருடங்களையும் மாதங்களையும் தவிர்த்து நாட்களின் வித்தியாச்ம் மாத்திரம் கிடைக்கும்.
இதே சமன்பாட்டை இன்னும் சற்று மாற்றி இன்று உன் வயது ...வருடங்கள் ... , மாதங்கள் ...., நாட்கள் எனவும் காட்டலாம். அதற்கு எக்ஸ்லில் உள்ள TEXT எனும் பங்ஸனையும் பிரயோகிக்க் வேண்டும். இந்த பங்ஸன் என் பெறுமாணத்தை டெக்ஸ்டாக மாற்றி விடுகிறது. 

அதற்கு வேறொரு செல்லில் ="இன்று உன் வயது " & TEXT(B5, "0") & " வருடங்கள் ," & TEXT(B6, "0") & " மாதம் ," & TEXT(B7, "0") & " நாட்கள்." என வழங்குங்கள். இன்று உன் வய்து 19 வருடங்கள் ,1 மாதம் ,19 நாட்கள். எனும் விடையை எக்ஸல் காண்பிக்கும். .






நீங்கள் கணீயில் ஏதோ வேலையாக் இருக்கிறீர்கள். அப்போது உங்க்ள் ந்ண்பரோ அல்லது வேறு எவரோ அவ்விடத்திற்கு வந்து விடுகிறார். நீங்கள் கணினியில் என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்பதை வந்தவர் பார்த்து விடக் கூடாது என நினைகிறீர்கள். அப்போது என்ன செய்வது? ஒரு துணியை எடுத்து கணினித் திரையை மூடி விடலாம் என்கிறீர்களா?

அதே போன்று இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு அவசர வேலையாக வெளியே சென்று வர நினைக்கிறீர்கள். கணினியின் இயக்கத்தை நிறுத்தி விட்டுச் சென்றால் மீண்டும் வந்து முன்னர் பணியாற்றிக் கொண்டிருந்த அதே பைல்களையும் ப்ரோக்ரம்களையும் திறக்க வேண்டிய கட்டாயம். கணினியின் இயக்கத்தை நிறுத்தாமல் சென்றால் வேறு யாராவது வந்து நீங்கள் என்ன செயுது கொண்டிருந்தீர்கள் என்பதைப் பார்த்து விடுவார்கள் என்ற அச்சம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில். உதவுகிறது கீபோர்டிலுள்ள். விண்டோஸ் கீ அல்லது Winkey. இந்த வின்கீயையும் L விசையையும் ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அடுத்த விநாடியே டெஸ்க் டொப் திரை மறைக்கப்பட்டு கணினியில் Log-on செய்யும் திரை தோன்றும். இங்கு அடுத்தவர்கள் உங்கள் கணினியை லொக் ஓன் செய்யாமலிருக்க உங்கள் பயனர் கணக்குக்கு (User Account) ஒரு கடவுச் சொல்லையும் (password) கொடுத்திருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.
















விசைப் பலகையின் வலது புற்ம் Insert எனும் ஒரு விசை இருப்பதை நீங்கள் அறிவீர்கள். சில கீபோர்டுகளில் இது INS எனப் பெயரிடப் பட்டிருக்கும். இதன் பய்ன்பாடு என்ன என்பதை அறிவீர்களா? 

டைப் செய்த எழுத்துக்களை அழிப்பதற்கு Delete Key பயன்படுத்துவதைப் போல் சில (Word Processor) வேர்ட் ப்ரொஸசர்களில் எழுத்துக்களை இடையில் செருகு வதற்கு இந்த Insert கீயை அழுத்த வேண்டியிருக்கும்.. அல்லா விடின் இடையில் டைப் செய்யும் எழுத்துக்கள் முன்னர் டைப் செய்த எழுத்துக்களை (Overwrite) அழித்து விடும்.. எம். எஸ். வர்டில் இந்த விசை எம்.எஸ்.வர்டைத் திறந்ததுமே Insert நிலையிலேயே இயல்பாக் (default) இருக்கும். Insert கீயை ஒரு முறை அழுத்தியதும் அது Overwrite நிலைக்கு மாறி விடும். அப்போது இடையில் எழுத்துக்களை டைப் செய்யும்போது முன்னர் டைப் செய்த எழுத்துக்களை அழித்து விடுவதைக் காணலாம்.

எம்.எஸ்.வர்ட் தற்போது Insert நிலையிலா அல்லது Overwrite நிலையிலா இருகிறது என்பதை Status Bar இல் காண்பிக்கும். ஸ்டேட்டஸ் பாரில் OVR என இருப்பின் அது Overwrite நிலையில் இருப்பதாகக் கொள்ளுங்கள். அத்தோடு Insert கீயை எம்.எஸ்.வர்டில் (Clip Board) க்ளிப் போர்டில் உள்ளதைப் (Paste) பேஸ்ட் செய்வதற்கான ஒரு குறுக்கு விசையாகவும் பயன்படுத்தலாம். அதற்கு Tools மெனுவில் Edit டேபைத் தெரிவு செய்யுங்கள். அங்கு Use the ‘Ins’ key for paste என்பதைத் தெரிவு செய்து ஓகே சொலுங்கள்.








ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.

சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.

எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.


முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.

இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.

டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா! சந்தோஷமா!!









போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்

Magnetic Lasso Tool

போட்டாஷாப்பில் சென்ற பாடங்களில் Lasso Tool பற்றி பார்த்தோம். இன்று அதே Lasso Tool-ல் மூன்றாவதாக
உள்ள Magnetic Lasso Tool பற்றி பார்க்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.


இதுவும் படத்தை தேர்வு செய்ய பயன்படுகின்றது.ஒரு
படத்தில் உள்ள பல வளைவுகளை தேர்வு செய்வது சற்று
சிரமம். அதற்கு நீங்கள் இந்த டூலை பயன்படுத்தலாம்.
பெயருக்கு ஏற்றார்போல் இந்த டூலை நீங்கள் படத்தின்
அருகில் கொண்டு செல்லும் சமயம் படத்தின் ஓரத்தை
இந்த டூலே தேர்வு செய்துகொண்டுவிடும்.

கீழே உள்ள இந்த பூவின் படத்தை பாருங்கள்.

இப்போது பூவின் ஓரம் கர்சரை கொண்டு செல்லும் சமயம் படத்தின் ஓரத்தில் அதுவே தேர்வு செய்வதை காணலாம்


இப்போது படத்தின் ஓரங்கள் முழுவதும் கர்சரை கிளிக் கொண்டு செல்ல படம் முழுவதும் தேர்வு செய்யலாம்

இப்போது கட் செய்தபின் வந்துள்ள படம் கீ்ழே:-

இதனை சுற்றி உள்ள் இடத்தை வண்ணம் கொண்டு நிரப்ப வந்துள்ள படம் கீழே:-

அதைப்போல் ஒரு பறவையையும் தேர்வு செய்துள்ளேன். படம் கீழே:-

இந்த Magnetic Lasso Tool-ல் மற்றும் ஓரு வசதியும் உள்ளது.
கீழே உள்ள Option Bar கவனியுங்கள்

இதில் உள்ள Feather-ல் வேண்டிய பிக்ஸல்கள் தரலாம்.
இதில் உள்ள Width என்பது காந்த தன்மையின் அளவை குறிக்கும்.
இதை 10 என்று வைத்தால் Mouse-ன் கர்சர் உள்ள இடத்தில் இருந்து
10 pixel கள் இடைவெளி வரை உள்ள் படத்தின்
Border-ஐ இந்த டூல் புரிந்து கொள்ளும்.படத்தில் பல
வளைவுகள் இருந்தால் இந்த மதிப்பை குறைவாக
வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக தலையின் முடியை
தேர்வு செய்யும்சமயமும், விலங்குகளின் வாலை தேர்வு
செய்யும் சமயமும் இது மிகவும் பயன்படும்.
இதில் கடைசியாக உள்ள Frequency என்பது நாம்
இந்த டூல் கொண்டு வரையும்சமயம் தோன்றும்
புள்ளிகளின் நெருக்கத்தைக் குறிக்கும்.இந்த
புள்ளிகளை Fasteing Point என்று கூறலாம்.
இதில் உள்ள Edge Control என்பது உருவத்தில்
உள்ள Contrast நிறத்தை இந்த டூல் அறியும். அதிக
Contrast உள்ள இடங்களை அறிந்து கொள்ள இந்த
எண்ணை அதிகமாக கொடுக்கவும். இந்த டூல்
கொண்டு படத்தை வரைந்து முடித்துவிட்டபின்
கர்சரின் டபுள் கிளிக் செய்தோ அல்லது என்டர்கீ
யை அழுத்தி யோ முடிக்கலாம்.Magnetic Lasso Tool
கொண்டு படத்தை தேர்வு செய்யும் சமயம் நாம்
Lasso Tool க்கு மாற Alt Key அழுத்தி பின் கிளிக்
செய்யலாம். மீண்டும் பழையபடி நமக்கு Magnetic
Lasso Tool தேவைபட்டால் நாம் Alt Ket-ஐ
விட்டு விட Magnetic Lasso Tool வந்துவிடும்.
அடுத்த பதிவில் சந்திக்கலாம்


நம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. ஏன், லேப் டாப் கம்ப்யூட்டரைக் கூடத் தூக்கிச் செல்வது எளிதான காரியம் இல்லை. யு.எஸ்.பி. டிரைவைத்தான் எடுத்துக் செல்கிறோம். இதனால் நாம் வேறு ஒருவரின் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் அதன் டெஸ்க் டாப், சூழ்நிலை ஆகியவை நமக்கு அந்நியமான ஒரு வேலை தளத்தைத் தருகிறது.

அப்படியானால் நாம் பாக்கெட்டில் போட்டுச் செல்லும் யு.எஸ்.பி. டிரைவில் நம் கம்ப்யூட்டரின் சூழ்நிலையை நமக்குத் தரும் வகையில் அமைத்திட முடியுமா? ஆம், முடியும். இதற்கு ஒரு வழியாகத்தான் MojoPac என்னும் புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது.

மிக எளிதாக இதனை உங்கள் யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து கொள்ளலாம். நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் உங்கள் டிரைவை இணைத்துச் செயல்படுத்தத் தொடங்கினாலும் அது உடனே உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் சூழ்நிலையைத் தருகிறது. இதனால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இந்த MojoPac புரோகிராம் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி ஒரு புதிய சூழ்நிலையை உருவாக்குகிறது. உங்கள் யு.எஸ்.பி. டிரைவ் உங்களின் இ: டிரைவாக மாறுகிறது.

இதனால் எந்த கம்ப் யூட்டரில் இதனைப் பயன்படுத்துகிறீர்களோ அதில் உள்ள புரோகிராம்களுக்கு உங்களுக்கு அனுமதி கிடைக்காது. ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குத் தேவயான புரோகிராம்களை நீங்கள் பதிந்து இயக்கிக் கொள்ளலாம். இந்த புரோகிராம்கள் நீங்கள் எங்கெல்லாம் இந்த டிரைவை இணைத்துப் பயன் படுத்துகிறீர்களோ அங்கெல் லாம் கிடைக்கும்.

இதன் வேகத்தை அதிக பட்சம் பயன் படுத்த வேண்டும் என்றால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து அதில் யு.எஸ்.பி. டிரைவ் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். இதில் ஹார்ட்வேர் என்னும் பகுதியில் யு.எஸ்.பி. டிரைவைத் தேர்ந்தெடுத்து அதில் புராபர்ட்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ஏற்கனவே “Optimize for quick removal” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இதற்குப் பதிலாக “Optimize for Performance” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

MojoPac போல செயல்படும் புரோகிராம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த Portable Apps Suite என்னும் புரோகிராம் கிடைக்கிறது. இலவசமாய் எவ்வளவோ இணையத்தில் கிடைக்கின்றன.

ஏற்கனவே தெரிந்த பல புரோகிராம்களை விட்டுவிட்டு தெரியாத ஆனால் பல பயன்பாடுகளைத் தருகின்ற புரோகிராம்கள் குறித்து மேலே தகவல்கள் தரப்பட்டுள் ளன. தேவைப்பட்டால் மட்டுமே இறக்கி இன்ஸ் டால் செய்து பயன்படுத்தவும்.







போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்

போட்டோஷாப் Polygonal Lasso Tool

போட்டாஷாப்பில் சென்ற பதிவில் Lasso Tool
பற்றி பார்த்தோம். இன்று Polygonal Lasso Tool பற்றி
பார்க்கலாம். இது மூன்றாவதாக உள்ள Lasso Tool-ல்
உள்ள உப டூல்ஆகும். Lasso Tool மூலம் படத்தை
சுற்றி மொத்தமாக தேர்வு செய்தால் இந்த
Polygonal Lasso Tool மூலம் ஒரு படத்தில் உள்ள
வளைந்துள்ள படத்தையே தேர்வு செய்யலாம்.
ஒரு கார் படம் இருக்கின்றது. அந்த காரை மட்டும்
தேர்வு செய்யவேண்டும். இந்த டூல் உபயோகப்படும்.
சரி இப்போது கீழே உள்ள படத்தை பாருங்கள்.



இப்போது Polygonal Lasso Tool தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்போது நான் கீழே உள்ள படத்தை தேர்வு செய்துள்ளேன்.

இப்போது இந்த பட்டாம்பூச்சியை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த டூல் மூலம் பட்டாம்பூச்சியை கட் செய்யுங்கள்.


ரைட் . இப்போது பட்டாம் பூச்சி நடுவில் வைத்து ரைட் கிளிக்
செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும். அதில் உள்ள Select Inverse கிளிக் செய்யுங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.



இப்போது படத்தை பாருங்கள். படத்தை சுற்றி உள்ள
இடங்களில் தேர்வு செய்துள்ளதை பாருங்கள்.

இப்போது டெலிட் கீ யை அழுத்துங்கள்.இப்போது உங்கள்
Backround Color -நடுவில் படம் தேர்வாகிஉள்ளதை பாருங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள். பட்டாம் பூச்சி மட்டும்
தனியாக தேர்வாகிஉள்ளது. இதை வேண்டிய இடத்தில்
நாம் பொருத்திக்கொள்ளலாம்.

இரண்டு மூன்று முறை முயற்சி செய்யுங்கள். சரியாக வரும். அடுத்த பதிவில் சந்திக்கலாம்





























சில சாப்ட்வேர்களை நாம் கணிணியில் இன்ஸ்டால்
செய்வோம். பிறகு அது தேவையில்லையென்று
அதை அன்இன்ஸ்டால் செய்துவிடுவோம். அவ்வாறு
அன்இன்ஸ்டால் செய்யும்போது முறையாக அதை
அன்இன்ஸ்டால் செய்யவேண்டும். அவ்வாறு
அன்இன்ஸ்டால் செய்ய முத்தான மூன்று வழிகளை
இப்போது பார்க்கலாம்.

முதல் வழிமுறை:-
தேவையில்லாத சாப்ட்வேரை முடிவு
செய்துகொள்ளுங்கள். அடுத்து Start கிளிக் செய்து
வரும் - Programs -ல் நமது சாப்ட்வேரை தேர்ந்தேடுங்கள்.
அந்த ப்ரோகிராமுடன்Uninstall என்கின்ற யுட்டிலிட்டி
கொடுத்திருப்பார்கள்.அதை பயன்படுத்தி சாப்ட்வேரை
நீக்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

இரண்டாவது வழிமுறை:-

Start கிளிக் செய்யுங்கள்.Settings கிளிக் செய்யு்ங்கள்.
வரும் மெனுவில் Control Pannel கிளிக் செய்யுங்கள்.
வரும் விண்டோவில் Add/Remove Programs கிளிக்
செய்து வரும் விண்டோவில் வேண்டாத சாப்ட்வேரை
தேர்வு செய்து Uninstall கிளிக் செய்யவும். கீழே
உள்ள படத்தை பாருங்கள்.

மூன்றாவது வழிமுறை:-

இதை கவனத்துடன் செய்யவேண்டும். இது மெயின்
பாக்ஸில் பீஸ்போடுவது போன்றது.சரியாக செய்ய
வில்லையென்றால் ஒன்றும் ப்ரச்சினை யில்லை.
பார்த்துக்கலாம். என்ன .மீண்டும் சர்வீஸ் இன்ஜினியரை
கூப்பிட வேண்டும். அவ்வளவு தான்.சரி இனி
ரெஜிஸ்டரில் இருந்து சாப்ட்வேரை நீக்குவது பற்றி
இப்போது பார்க்கலாம்.

முதலில் Start கிளிக் செய்து Runஓப்பன் செய்து
REGEDIT.EXE-ஐ தட்டச்சு செய்யவும். கீழே உள்ள
விண்டோவினை பாருங்கள்.
வரும் விண்டோவில் உள்ள HKEY-LOCAL-MACHINE
கிளிக் செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள Software கிளிக் செய்யவும்.

பின் வரும் விண்டோவில் Microsoft கிளிக் செய்யுங்கள்.
அதில் உள்ள கூட்டல் குறியை நீங்கள் கிளிக்
செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வரும் விண்டோவில் முறையே Curent Version
மற்றும் Uninstal தேர்ந்தேடுங்கள். கீழே உள்ள
விண்டோவினை பாருங்கள்.
இதில் Uninstal கிளிக் செய்ய உங்கள் கணிணியில் உள்ள
சாப்ட்வேர் லிஸ்ட் அனைத்தும் வரும்.
இதில் தேவையான சாப்ட்வேரை தேர்வு செய்து அதை Delete செய்யுங்கள்.
இறுதியில் முறையே வெளியெறுங்கள். அவ்வளவுதான்.







 

blogger templates | Make Money Online