Showing posts with label கணனி தொடர்பான. Show all posts
Showing posts with label கணனி தொடர்பான. Show all posts

Thursday, February 18, 2010



நீங்கள் கணீயில் ஏதோ வேலையாக் இருக்கிறீர்கள். அப்போது உங்க்ள் ந்ண்பரோ அல்லது வேறு எவரோ அவ்விடத்திற்கு வந்து விடுகிறார். நீங்கள் கணினியில் என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்பதை வந்தவர் பார்த்து விடக் கூடாது என நினைகிறீர்கள். அப்போது என்ன செய்வது? ஒரு துணியை எடுத்து கணினித் திரையை மூடி விடலாம் என்கிறீர்களா?

அதே போன்று இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு அவசர வேலையாக வெளியே சென்று வர நினைக்கிறீர்கள். கணினியின் இயக்கத்தை நிறுத்தி விட்டுச் சென்றால் மீண்டும் வந்து முன்னர் பணியாற்றிக் கொண்டிருந்த அதே பைல்களையும் ப்ரோக்ரம்களையும் திறக்க வேண்டிய கட்டாயம். கணினியின் இயக்கத்தை நிறுத்தாமல் சென்றால் வேறு யாராவது வந்து நீங்கள் என்ன செயுது கொண்டிருந்தீர்கள் என்பதைப் பார்த்து விடுவார்கள் என்ற அச்சம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில். உதவுகிறது கீபோர்டிலுள்ள். விண்டோஸ் கீ அல்லது Winkey. இந்த வின்கீயையும் L விசையையும் ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அடுத்த விநாடியே டெஸ்க் டொப் திரை மறைக்கப்பட்டு கணினியில் Log-on செய்யும் திரை தோன்றும். இங்கு அடுத்தவர்கள் உங்கள் கணினியை லொக் ஓன் செய்யாமலிருக்க உங்கள் பயனர் கணக்குக்கு (User Account) ஒரு கடவுச் சொல்லையும் (password) கொடுத்திருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.
















விசைப் பலகையின் வலது புற்ம் Insert எனும் ஒரு விசை இருப்பதை நீங்கள் அறிவீர்கள். சில கீபோர்டுகளில் இது INS எனப் பெயரிடப் பட்டிருக்கும். இதன் பய்ன்பாடு என்ன என்பதை அறிவீர்களா? 

டைப் செய்த எழுத்துக்களை அழிப்பதற்கு Delete Key பயன்படுத்துவதைப் போல் சில (Word Processor) வேர்ட் ப்ரொஸசர்களில் எழுத்துக்களை இடையில் செருகு வதற்கு இந்த Insert கீயை அழுத்த வேண்டியிருக்கும்.. அல்லா விடின் இடையில் டைப் செய்யும் எழுத்துக்கள் முன்னர் டைப் செய்த எழுத்துக்களை (Overwrite) அழித்து விடும்.. எம். எஸ். வர்டில் இந்த விசை எம்.எஸ்.வர்டைத் திறந்ததுமே Insert நிலையிலேயே இயல்பாக் (default) இருக்கும். Insert கீயை ஒரு முறை அழுத்தியதும் அது Overwrite நிலைக்கு மாறி விடும். அப்போது இடையில் எழுத்துக்களை டைப் செய்யும்போது முன்னர் டைப் செய்த எழுத்துக்களை அழித்து விடுவதைக் காணலாம்.

எம்.எஸ்.வர்ட் தற்போது Insert நிலையிலா அல்லது Overwrite நிலையிலா இருகிறது என்பதை Status Bar இல் காண்பிக்கும். ஸ்டேட்டஸ் பாரில் OVR என இருப்பின் அது Overwrite நிலையில் இருப்பதாகக் கொள்ளுங்கள். அத்தோடு Insert கீயை எம்.எஸ்.வர்டில் (Clip Board) க்ளிப் போர்டில் உள்ளதைப் (Paste) பேஸ்ட் செய்வதற்கான ஒரு குறுக்கு விசையாகவும் பயன்படுத்தலாம். அதற்கு Tools மெனுவில் Edit டேபைத் தெரிவு செய்யுங்கள். அங்கு Use the ‘Ins’ key for paste என்பதைத் தெரிவு செய்து ஓகே சொலுங்கள்.








ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.

சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.

எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.


முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.

இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.

டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா! சந்தோஷமா!!









சில சாப்ட்வேர்களை நாம் கணிணியில் இன்ஸ்டால்
செய்வோம். பிறகு அது தேவையில்லையென்று
அதை அன்இன்ஸ்டால் செய்துவிடுவோம். அவ்வாறு
அன்இன்ஸ்டால் செய்யும்போது முறையாக அதை
அன்இன்ஸ்டால் செய்யவேண்டும். அவ்வாறு
அன்இன்ஸ்டால் செய்ய முத்தான மூன்று வழிகளை
இப்போது பார்க்கலாம்.

முதல் வழிமுறை:-
தேவையில்லாத சாப்ட்வேரை முடிவு
செய்துகொள்ளுங்கள். அடுத்து Start கிளிக் செய்து
வரும் - Programs -ல் நமது சாப்ட்வேரை தேர்ந்தேடுங்கள்.
அந்த ப்ரோகிராமுடன்Uninstall என்கின்ற யுட்டிலிட்டி
கொடுத்திருப்பார்கள்.அதை பயன்படுத்தி சாப்ட்வேரை
நீக்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

இரண்டாவது வழிமுறை:-

Start கிளிக் செய்யுங்கள்.Settings கிளிக் செய்யு்ங்கள்.
வரும் மெனுவில் Control Pannel கிளிக் செய்யுங்கள்.
வரும் விண்டோவில் Add/Remove Programs கிளிக்
செய்து வரும் விண்டோவில் வேண்டாத சாப்ட்வேரை
தேர்வு செய்து Uninstall கிளிக் செய்யவும். கீழே
உள்ள படத்தை பாருங்கள்.

மூன்றாவது வழிமுறை:-

இதை கவனத்துடன் செய்யவேண்டும். இது மெயின்
பாக்ஸில் பீஸ்போடுவது போன்றது.சரியாக செய்ய
வில்லையென்றால் ஒன்றும் ப்ரச்சினை யில்லை.
பார்த்துக்கலாம். என்ன .மீண்டும் சர்வீஸ் இன்ஜினியரை
கூப்பிட வேண்டும். அவ்வளவு தான்.சரி இனி
ரெஜிஸ்டரில் இருந்து சாப்ட்வேரை நீக்குவது பற்றி
இப்போது பார்க்கலாம்.

முதலில் Start கிளிக் செய்து Runஓப்பன் செய்து
REGEDIT.EXE-ஐ தட்டச்சு செய்யவும். கீழே உள்ள
விண்டோவினை பாருங்கள்.
வரும் விண்டோவில் உள்ள HKEY-LOCAL-MACHINE
கிளிக் செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள Software கிளிக் செய்யவும்.

பின் வரும் விண்டோவில் Microsoft கிளிக் செய்யுங்கள்.
அதில் உள்ள கூட்டல் குறியை நீங்கள் கிளிக்
செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வரும் விண்டோவில் முறையே Curent Version
மற்றும் Uninstal தேர்ந்தேடுங்கள். கீழே உள்ள
விண்டோவினை பாருங்கள்.
இதில் Uninstal கிளிக் செய்ய உங்கள் கணிணியில் உள்ள
சாப்ட்வேர் லிஸ்ட் அனைத்தும் வரும்.
இதில் தேவையான சாப்ட்வேரை தேர்வு செய்து அதை Delete செய்யுங்கள்.
இறுதியில் முறையே வெளியெறுங்கள். அவ்வளவுதான்.











விண்டொஸில் ஒரு எப்லிகேசன் செயற்பட மறுக்கும்போது அது பற்றிய பிழைச் செய்தியை Error Report மைக்ரோஸொப்ட் நிறுவனத்துக்கு இணையம் வழியே அனுப்புவதன் மூலம் அதற்குரிய தீர்வை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த பிழைச் செய்தி அடிக்கடி தோன்றும் போது அவர்கள் தரும் இந்த வசதியை சில வேளை தொல்லையாகவும் நினைக்கத் தோன்றும். அதனால் இந்தப் பிழைச் செய்தி வராமல் த்டுக்கவும் விண்டோஸில் வழியுள்ளது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுவே.

கண்ட்ரோல் பேண்லுக்குள் நுழையுங்கள். அங்கு. System தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Advanced டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Error Reporting பட்டனில் க்ளிக் செய்து வரும் டயலொக் பொக்ஸில் Disable Error Reporting தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள். தொல்லை ஓய்ந்து விடும்.














டிஜிட்டல் கேமராவிலிருந்து படங்களை ட்வுன்லோட் செய்யும்போது அவற்றின் பெயர்கள் அனேகமாக உங்களால் புரிந்து கொள்ள முடியாத பெயர்களாக இருக்கும்.. அந்த பைல்களின் பெயர்களை (File Name) நீங்கள் விரும்பியபடி மாற்றிக் கொள்ள நினைத்தால் ஒவ்வொன்றாக மாற்றாமல் ஒரே முறையில் எல்லா பைல்களின் பெயர்களையும் மாற்றிக் கொள்ளும் வ்சதியை (Batch File Rename) விண்டோஸ் தருகிறது. இந்த வசதி மூலம் படங்கள் மட்டுமன்றி எந்த வகையான பைல்களின் பெயர்களையும் மாற்றிக் கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். . 

படங்கள் உள்ள போல்டரைத் திறந்து பெயரை மாற்ற வேண்டிய படங்களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள் பெயரை மாற்ற வேண்டிய படங்கள் அருகருகே இல்லாமல் வேவ்வேறு இடங்களில் இருக்குமாயின் Ctrl விசையை அழுத்தியவாறு படங்கள் மீது க்ளிக் செய்யுங்கள். அடுத்து File மெனுவில் அல்லது ரைட் க்ளிக் செய்து Rename தெரிவு செய்யுங்கள். பின்னர் அந்த பைலுக்குப் புதிய பெயரை டைப் செய்து Enter கீயை அழுத்துங்கள். நீங்கள் தெரிவு செய்த பைல்கள் அனைத்தும் வழங்கிய புதிய பெயரோடும் ஒரு தொடரிலக்கத்துடனும் மாறியிருக்கக் காண்லாம். உதாரணமாக முதல் பைலுக்கு Piraba என வழங்கினால் ஏனைய பைல்கள் Piraba(1), Piraba (2) என மாறியிருப்பதைக் காணலாம். முதல் பைலுக்குப் பெயருடன் அடைப்புக் குறிக்குள் ஒரு இலக்கத்தையும் சேர்த்து வழங்கும்போது ஏனைய பைல்களும் தொடர்ச்சியாக மாறக் காணலாம். அதாவது முதல் பைலுக்கு Piraba (10) என வழங்கும்போது அடுத்த் பைல்கள் Piraba (11), Piraba(12) என மாறும்.










கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்கள் குறித்தும் தகவல்களைக் கொண்டுள்ள இடம் தான் டிவைஸ் மேனேஜர். மவுஸ், கீ போர்டு, மோடம், மானிட்டர், சவுண்ட் கார்ட் என அனைத்து ஹார்ட்வேர்களும் எப்படி ஒவ்வொன்றுடனும் இணைக்கப்படுகின்றன என்று இதில் தெரியவரும். அத்துடன் ஒவ்வொரு ஹார்ட்வேர் சாதனமும் எப்படி இயங்க வேண்டும் என்பதனையும் இதன் மூலம் சென்று கான்பிகர் செய்திடலாம். இதன் மூலம் டிரைவர்களை அப்டேட் செய்திடலாம்; ஹார்ட்வேர் செட்டிங்குகளை மாற்றிடலாம்; பிரச்னைகளை எளிதாக தீர்த்துவிடலாம்.

ஏதாவது ஒரு ஹார்ட்வேர் சாதனத்தில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால் டிவைஸ் மேனேஜர் சென்று அந்த குறிப்பிட்ட சாதனம் எப்படி கான்பிகர் செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்து பிரச்னைகளைத் தீர்க்கலாம். தற்காலிகமாக அவற்றை நீக்கி மீண்டும் இன்ஸ்டால் செய்திடலாம். ஆனால் இவை எல்லாம் நன்றாகத் தெரிந்த பின்னரே இவற்றில் கை வைக்க வேண்டும். என்ன என்று தெரிந்து கொள்வதில் தவறில்லை.

டிவைஸ் மேனேஜரைக் My Computer ஐகானை ரைட் கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள டேப்களில் Hardware என்ற டேபைக் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் Device Manager என்ற பட்டனைக் கிளிக் செய்து டிவைஸ் மேனேஜரைப் பெறலாம்.
இங்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களும் இடம் பெற்றிருக்கும். ஏதாவது ஒரு சாதனத்தின் இயக்கநிலையை அறிய வேண்டும் என்றால் பட்டியலில் அதனைப் பார்த்து அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும். அந்த சாதனத்துடன் தொடர்புடையவை தெரியவரும். அதில் ஏதாவது ஒன்றில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் டேப்களில் General என்ற டேபைக் கிளிக் செய்தால் Device status பாக்ஸ் கிடைக்கும். இங்கு அந்த சாதனம் சரியாகச் செயலாற்றுகிறதா என்ற தகவல் கிடைக்கும். உங்களைப் பொறுத்தவரை அதில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால் Troubleshoot பட்டனை அழுத்தி பிரச்னையைச் சரி செய்வதில் முனையலாம்.




கம்ப்யூட்டர்களை செட் செய்திடுகையில் வழக்கமாக முக்கிய டிரைவ் C ஆகவும் மற்றவை அதனைத் தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இணைத்து எடுக்கக் கூடிய பென் டிரைவ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் போது கம்ப்யூட்டரில் உள்ள இயக்கத் தொகுப்பு தானாகவே ஒரு எழுத்துப் பெயரை சூட்டிக் கொண்டு பின் அதனை எடுத்தவுடன் நீக்கி விடுகிறது. ஆனால் A முதல் Z வரை இந்த டிரைவ்களுக்குப் பெயர் சூட்டலாம், அதுவும் நீங்களே சூட்டலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள டிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்நாப் இன் (Disk Management snapin) என்ற சாப்ட்வேர் சாதனம் இந்த வசதியைத் தருகிறது.

உங்களுடைய கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ்களுக்கு A மற்றும் F எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹார்ட் டிரைவின் இயக்கத் தொகுப்பின் செயல் பகுதி இக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ் இல்லை என்றால் A மற்றும் F எழுத்துக்களையும் நீங்கள் விரும்பும் டிரைவிற்குப் பயன்படுத்தலாம். ஆனால் ஏதேனும் ஒரு நாளில் பிளாப்பி டிரைவ் இணைக்கையில் இந்த எழுத்துக்கள் தேவை என்பதால் அவற்றை நீக்கி மற்ற எழுத்துக்களை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டிரைவ் அல்லது அதில் உள்ள ஒரு பிரிவு அல்லது வால்யூம் ஆகியவற்றிற்கு நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை முதல் முதலாக எப்படி அதன் பெயராக அமைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள். முதலில் வழக்கம் போல உங்கள் கம்ப்யூட்டர் பயனாளராக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள்.

1. பின் Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக்கிடவும்.
(குறிப்பு: கண்ட்ரோல் பேனலில் category view என்ற வகைப் பிரிவில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டிருக்கும். எனவே அந்த வகையை முதலில் திறந்து கொள்ள வேண்டும்.)

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. இதில் நீங்கள் எழுத்து அமைத்திட விரும்பும் டிரைவில் அல்லது பிரிவில் ரைட் கிளிக் செய்திடவும். அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. கிடைப்பதில் Add என்பதைக் கிளிக்கிடுக.

5. இப்போது “Assign the following drive letter” என்பதில் கம்ப்யூட்டர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து காட்டும் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந் தால் அதனையே தேர்ந்தெடுக்கவும். இல்லையேல் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

டிரைவ் ஒன்றுக்கு அல்லது அதன் பிரிவிற்கு ஒரு எழுத்து ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மாற்றி, விரும்பும் எழுத்தை அமைப்பது என்று பார்ப்போம்.

1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Change என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. “Assign the following drive letter” என்ற பிரிவில் நீங்கள் விரும்பும் எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

6. எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தவா என்று செய்தி கிடைக்கையில் கவனமாக ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இனி நீங்கள் மாற்றம் செய்த பிரிவு அல்லது டிரைவில் அதற்கான பெயர் எழுத்து வழக்கமாகக் காட்டப்படும் இடங்களில் எல்லாம் தென்படும்.

ஏற்கனவே கொடுத்த எழுத்தை நீக்குவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள படி செயல்படுங்கள்.

1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Remove என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. இந்நிலையில் எழுத்தை நீக்கவா என்ற எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். இப்போது ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடவும். இந்நிலையில் அந்த பகுதிக்கு அளிக்கப்பட்ட பெயர் எழுத்து நீக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு தேவைப்படும் எழுத்தினை உங்கள் டிரைவிற்குக் கொடுத்து பார்க்கலாம்.






கணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input / Output System எனபதாகும். அதன் மூலம். நினைவகம், ஹாட் டிஸ்க், மற்றும் துணைச் சாதனங்கள் அனைத்தும் முறையாக இயங்குகிறதா என்பதைச் சரி பார்த்து உறுதி செய்து கொள்ளும். பயோஸ் ஆனது கணினியிலுள்ள இயங்கு தளத்திலிருந்து வேறுபட்டது. ஹாட் டிஸ்கில், சேமிக்கப்பட்டிருக்கும். இயங்குதளம் கணினிக்கும் அதனைப் பயன் படுத்துபவர்களுக்குமான ஒரு இடை முகப்பை வழங்கிறது. எனினும் பயோஸ் ப்ரோக்ரமானது கணினி மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் ரொம் (Read Only Memory) எனும் நினைவக (Chip) சிப்பில் சேமிக்கப்பட்டிருக்கும். கணினியை ஓன் செய்ததும் கணினியைக் கட்டுப்படுத்தி பின்னர் ஹாட் டிஸ்கிலுள்ள இயங்கு தளத்தை நினைவகத்தில் ஏற்றி கணினியை ஆரம்பித்து வைக்கிறது பயோஸ். இதனை Firmware எனவும் அழைப்பதுண்டு. ஏனெனில் இதில் நாம் மாற்றங்கள் செய்ய முடியாது. கணினியில் பயோஸிற்கு பல பணிகள் வழங்கப் பட்டிருந்தாலும் இயங்கு தளத்தை ஆரம்பித்து வைபபதே அதன் முக்கிய பணியாகும். கணினியை இயக்கியதும் பயோஸ் மைக்ரோ ப்ரொசஸருக்கு அதன் முதல் அறிவுறுத்தலை வழங்குகிறது. அனைத்து வன்பொருள்களும் முறையாகக இயங்குகிறதா என்பதை சுய பரிசோதானை செய்து கொள்ளும். இதனை Power On Self Test (POST) எனப்படுகிறது ஹாட் டிஸ்க், சீடி ரொம் போன்றவற்றை இனம் காணுதல், நினைவகத்தின் அளவை சோதித்தல், ப்ரோசெஸ்ஸரின் வேகத்தை அளவிடல் கடிகாரம் மற்றும் முக்கிய செட்டிங்க்ஸ் என்பவற்றை நிர்வகித்தல். கிரபிக்ஸ் காட் (Graphics Card) , சவுண்ட் காட் (Sound Card) போன்ற எனைய சாதனங்களில் பொருத்தப் பட்டிருக்கும் இது போனற வேறு பயோஸ் சிப்புகளை ஆரம்பித்து வைத்தல் அவற்றின் ஏனைய பணிகளில் அடங்குகின்றன..

கணினியை இயக்கியதும் ஆரம்பிகும் பயோஸ் ப்ரோக்ரமுடைய வழமையான பணி ஒழுங்கில் CMOS ஐ பரிசோத்திப்பதன் மூலம் பயனர் தெரிவுகளில் ஏதாவது மாற்றங்கள் உள்ளதா என்பதைப் பரிசோதித்தல் மின் வழங்கியை நிவகித்தல் (Power Management), மற்றும் எந்த ட்ரைவிலிரிருந்து இயங்கு தளத்தை ஆரம்பிப்பது (Boot Sequence) என்பதைத் தீர்மானித்தல் போன்ற பல பணிகள் அடங்குகின்றன. தேதி, நேரம் மற்றும் ஏனைய கணினியின் செட்டிங்ஸ் விவரங்களை பேட்டரி மின்சக்கதியில் இயங்கும் ஒரு நினைவக சிப்பில் சேமிக்கிறது. இதனை (CMOS) சிமோஸ் எனப்படுகிறது. BIOS (Basic Input/Output System) என்பதும் CMOS (Complementary Metal Oxide Semiconductor) என்பதும் ஒன்றையே குறிப்பதாகப் பலரும் தவறாகக் எண்ணுகின்றன்ர். இவற்றிற்கிடையே தொடர்புகளிருந்தாலும் இரண்டும் வேறு பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. . பயோஸ் என்பது கணினியை இயக்கும் அதேவேளை தேதி, நேரம் மற்றும் செட்டிங்ஸ் விவரங்களை பயோஸ் சேமித்து வைக்குமிடமே சிமோஸ் எனும் சிப்பாகும். சீமோஸ் என்பது ஒரு வகை நினைவகம்,.



சீமோஸில் மாற்றங்கள் செய்ய கணினியை ஓன் (On) செய்தவுடனேயே கீபோர்ர்டில் குறித்தத ஒரு விசையை அழுத்த வேண்டும். இதற்கான அறிவுறுத்தல் கணினியை ஆரம்பித்த்துமே திரையின் கீழ் எந்த விசையை அழுத்த வேண்டும் என்பதைக் காண்பிக்கும். சீமோஸ் செட்டபில் நுளைந்த்துமே CMOS கணினிப் பயனருக்குப் பல தெரிவுகளைச் செய்ய அனுமதிக்கிறது. தேதி மற்றும் நேரத்தை மாற்றியமைப்பது, கணினியை எந்த ட்ரைவிலிருந்து இயக்கி இயங்கு தளத்தை ஆரம்பிப்பது பூட் செய்யப்படும் ஒழுங்கு (Boot Sequence) , பாஸ்வர்ட் செட்டிங், நினைவக செட்டிங். மின் வழங்கியை நிர்வகித்தல் போன்ற பல செட்டிங்ஸை மாற்ற்ரியமைக்கக் கூடிய வசதியைத் தருகிறது.பயோஸ் ப்ரோக்ரமை காலத்துக்குக் காலம் புதுப்பிக்கவும் (update) முடியும். புதிதாகத் தர்யாரிக்கப்பட்ட ஏதாவது வன்பொருள் சாதனங்களைக் கணினி இனம் காண வேண்டுமானால் அந்த பயோஸை வடிவமைத்த நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து அதன புதிய பதிப்பை டவுன் லோட் செய்து கொள்ள வேண்டும். பயோஸை அப்டேட் செய்வதற்குரிய யூட்டிலிட்டியும் அதனுடன் இணைந்து வரும். யூட்டிலிட்டி ப்ரோக்ரமையும் அப்டேட் பைல்களையும் ஒரு ப்லொப்பி டிஸ்கில் பிரதி செய்து ப்லொப்பியை கணினியில் நுளைத்து இயக்க பழைய பயோஸ் பைல்களை அழித்து புதிதாக நிறுவிக் கொள்ளலாம். . எனினும் பயோஸ் அப்டேட் செய்வதில் கூடிய கவனம் தேவை. தற்போது கணினிகளில் பயோஸை அப்டேட் செய்ய வேண்டிய தேவை அரிதாகவே ஏற்படுகிறது. எனினும் பழைய கணினிகளிலுள்ள பயோஸ் சிப் தற்போது பாவனையிளுள்ள வன்பொருள் சாதனங்களை ஆதரிக்காது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வந்த கணினிகளில் பயோஸ் ஆனது அதன் ரொம் சிப்பை மாற்றுவதன் முலமே அப்டேட் செய்யப்பட்டது. எனினும் தற்போது EEPROM (Electrically Erasable Programmable Read-Only Memory எனும் நினைவக சிப்பிலேயே சேமிக்க்கப்படுவதால ரொம் சிபை மாற்றாமலேயே தேவையேற்படின் பயோசை அப்டேட் செய்து கொள்ள லாம்.













உலகின் மிகப் பெரிய கணிணி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சர்ந்த கணினி வலையமைப்புகள் இணையத்தில் இணைந்துள்ளன. ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு கணினியூடாக பைல் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு வியாபித்திருக்கும் இந்தக் கணினி வலையமைப்பு அதி வேகம் கொண்ட கேபல் கொண்டிணைக்கப்பட்டுள்ளன. இதனை Internet Backbone எனப்படுகிறது.
பல்வேறு வகையான பல்வேறு அளவுகளைக் கொண்ட பல்வேறு இயங்கு தளங்களைக் கொண்ட ஆயிரக் கணக்கான கணினிகள் இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ளன. இவற்றை சேர்வர் கணினிகள் எனப்படும்.
பல்வேறு வகையான கணினிகள் இணையத்தில் இணைந்துள்ள போதும் அவற்றிற்கிடையே TCP/IP (Transmission Control Protocol /Internet Protocol) எனும் பொதுவான ஒரு விதிமுறை பின்பற்றப்படுவதன் காரணமாக நாம் எந்த ஒரு கணினியிருந்தும் மற்றுமொரு கணினியுடன் இலகுவாகத் தொடர்பாட முடிகிறது. .
இராணுவ தேவைக்காக அமெரிக்காவினால் 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பே பின்நாளில் இண்டர்நெட்டாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் இந்தக் கணினி வலையமைப்பு ARPANET என அழைக்கப்படது.

தற்போது இணையத்தின் உரிமையாளராக எந்த ஒரு நாடோ நிறுவனமோ இல்லை எனினும் இணையத்தின் வளர்ச்சிக்காகவும் இணையத்தில் விதி முறைகளை நிர்ணயிக்கவும் முறைப்படுத்தவுமென சில தன்னார்வநிறுவனங்கள் ஈடு பட்டு வருகின்றன.
இணையத்தின் மூலம் கிடைக்கும் சில பொதுவான பயன்பாடுகளாக எந்த வொரு விடயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல், மின்னஞ்சல் சேவை, நிகழ் நேரத்தில் ஒருவரோடொருவர் உரையாடுதல், பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளல், இசை, திரைப்படம், விளையாட்டு என பொழுது போக்கு அம்சங்களில் ஈடு படல் பொருட்கள் மற்றும் சேவைகளைப பெறுதல் விற்பனை செய்தல் மூலம் இணைய வணிகத்திலீடுபடல் போன்ற பல வற்றைக் குறிப்பிடலாம்.

இணையம் சார்ந்த சில கலைச் சொற்ளையும் அவற்றிற்கான விளக்கத் தையும் பார்ப்போம்.
Asymmetric Digital Subscriber Line (ADSL) : அதி வேக இணைய வசதியை வழங்கும் ஒரு இணைய இணைப்பு முறை. இதனையே Broadband எனவும் அழைக்கப்படுகிறது.
Blog : web Log என்பதன் சுருக்கமே ப்லோக். இதனை ஓன்லைன் ஜேர்னல் (online Journal) எனப்படுகிறது. இது இணைய தளம் போன்ற்தே. இணைய தள வடிவாக்கம் பற்றி அறியாதவர்கள் கூட இதனை இலகுவாக உருவாக்கலாம். இந்த சேவையை blogspot.com, wordpress.com என்பன இலவசமாக வழங்குகின்றன. தமிழில் வலைப்பதிவு எனப்படுகிறது.

Browser இணைய சேவைகளில் ஒன்றான உலகலாவிய வலைத் தளமமான WWW ஐ அணுகுவதற்குப் பயன்படும் மென்பொருளையே பிரவுஸர் (இணைய உலாவி) எனப்படுகிறது. உதாரணம்: இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மொஸில்லா பயபொக்ஸ், கூகில் க்ரோம்
Download : இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒரு கணினியிலிருந்து எமது கணினிக்கு பைல் ஒன்றைப் பெற்றுக் கொள்வதை டவுன்லோட் எனப்படும். Domain Name இணையத்தில், இணைந்துள்ள கணினிகளை அல்லது இணணய தளங்களை இலகுவாக நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் ஐபி முகவரி எனும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையை டொமேன் நெம் எனப்படுகிறது.
Dial-up: இணையத்தில் இணைவதற்குப் பலரும் நாடும் ஒரு பொதுவான இணைப்பு முறை. இணைய சேவை வழங்கும் நிறுவன கணினியை ஒரு மோடமைப் பாவித்து தொலைபேசிக் கம்பியூடாக இணைப்பக்கப்ப்டும். அதிக பட்சமாக 128 kbps அளவிலான வேகத்தையே கொண்டிருக்கும்.
E-mail (Electronic mail) : கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பிரபலமான இணைய சேவையே மின்னஞ்சல் ஆகும். மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் ஒரு மின்னஞ்சல் முகவரி அவசியம். ஒரு மின்னஞ்சல் முகவரி jeesa@gmail.com எனும் வடிவில் இருக்கும். இங்கு பயனர் பெயரும் டொமேன் பெயரும் @ எனும் குறியீட்டால் பிரிக்கப்படும். Extranet : ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. இது இணையத்தோடு தொடர்புபட்டிருக்கும். அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மட்டுமன்றி பொது மக்களும் உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லோடு இதனை அணுக முடியும்.
FTP : (File Transfer Protocol) இணையம் வழியே பெரிய அளவிலான பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளும் சேவையை FTP எனப்படுகிறது.
File attachment மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பப்படும் சிறிய ஆவணங்கள் மற்றும் படங்களை எட்டேச்மண்ட் எனப்படுகிறது.
Firewall இணையத்தைப் பயன்படுத்தி எமது கணினிக்குள் அனுமதியின்றி எவரும் ஊடுறுவாமல் தடுக்கும் மென்பொருளை பயவோல் எனப்படுகிறது.

Hyperlink : இணைய தள மொன்றில் ஒரு பக்கத்திலிருந்து மற்றுமொரு பக்கத்திற்கு அல்லது வேறொரு இணைய தளத்திற்கு வழங்கப்படும்
இணைப்பை ஹைபலின்க் எனப்படுகிறது.

HTTP (Hypertext Transfer Protocol) உலகலாவிய வலைத் தளத்தில் HTML ஆவணங்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான விதி முறையாகும்.

HTML (Hypertext Markup Language) வலைத்தளங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு கணினி மொழி.

Home Page ஒரு இணைய தளத்தின் முதல் பக்கத்தை அல்லது இணைய உலாவியைத் (வெப் பிரவுஸர்) திறக்கும் போது வரும் முதல் பக்கத்தை ஹோம் பேஜ் எனப்படுகிறது,.

Hacker ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள ஒரு கணினியின் பாதுகாப்பு ஓட்டைகளை நன்கறிந்து அக்கணினியினுள் அனுமதியின்றி நுளையும் ஒரு கை தேர்ந்த நபர் ஹெக்கர் (குறும்பர்). எனப்படுகிறார். பாதுகாப்புத் தன்மையைப் பரீட்சிப்பதற்காகவும் ஹெக்கர்களின் உதவியை நாடுவதுண்டு.

Instant Message (IM): இணையததைப் பயன் படுத்தி நிகழ் நேரத்தில் இருவருக்கிடையில் நிகழ்தப்படும் உரையாடலை உடனடி செய்திச் சேவை எனப்படுகிறது. உதாரணம் : யாஹூ மெஸ்ஸென்ஜர், ஸ்கைப்
Internet Service Provider (ISP):இணைய சேவை வழங்கும் நிறுவனத்தையே ISP எனப்படுகிறது. நமது கணினியை இணையத்துடன் இணைக்கும்போது இந்த நிறுவனத்தின் கணினியூடாகவே நம் இணையத்தில் இணைகிறோம்.

IP (Internet Protocol) address இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒவ்வொரு கணினியையும் வேறு படுத்திக் காட்டும், ஒரு இலக்கமே ஐபி முகவரி எனப்படுகிறது. இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். (உதாரனம்: 169.254.222.1). ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருகும்.

ISDN (Integrated Services Digital Network) டயல் அப், ப்ரோட்பேண்ட் போன்று ஒரு வகை இணைய இணைப்பாகும். இது டயல் அப்பை விட வேகமானது. ப்ரோட்பாண்டை விட வேகம் குறைந்தது. இது ஒரு டிஜிட்டல் சேவை என்பதால் மோடெம் அவசியமில்லை.

Intranet ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்களால் மட்டுமே இதனை அணுக முடியும். இது இணயத்தோடு தொடர்பு பட்டுமிருக்கலாம். தொடர்பு படாமலும் இருக்கலாம். எனினும் பொது மக்க்ள் யாரும் இந்த இந்த வலையமைப்பை அணுக முடியாது,

Modem: என்லொக் வடிவில் டேட்டாவை ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு தொலைபேசிக் கம்பியூடாக அனுப்புவதற்கு மோடெம் எனும் சாதனம் பயன் படுத்தப்படுகிறது, இது டிஜிட்டல் வடிவிலுள்ள் டேட்டாவை (analogue) எனலொக்காகவும் (modulation) எனலொக் வடிவிலுள்ளதை டிஜிட்டல் (demodulation) வ்டிவிலும் மாற்றுகிறது.
Offline: கணினி இணையத்தில் இணைந்திராத சந்தர்ப்பத்தை ஓப்லைன் எனப்படுகிறது. . Online: இணையத்தில் எமது கணினி இணந்திருக்கும் போது கணினி ஓன்லைனில் இருப்பதாகச் சொல்லப்படும்.
Password: ஒரு பைலை, கணினியை அல்லது வலையமைப்பை அதிகாரமளிக்கப்பட்வர்கள் மாத்திரம் அனுகுவதற்குப் பயன்படும் எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்ட ஒரு ரகசிய சொல்.

Portal: மின்னஞ்சல், தேடற்பொறி ,போன்ற பல வகைப்பட்ட சேவைகளை வழங்கும் ஒரு இணைய தளத்தை வெப் போட்டல் எனப்படுகிறது. உதாரணம் : யாஹூ

Server ஒரு வலையமைப்பில் தனது வளங்களையும் தகவல்களையும் ஏனைய கணினிகளுடன் பகிர்ந்து கொள்ளும் கணினிகளை சேர்வர் அல்லது Host ஹோஸ்ட் எனப்படுகிறது.

Search Engine வேர்ல்ட் வைட் வெப் எனும் உலகலாவிய வலையமைப்பில் எமக்குத் தேவையான தகவல்கள் எந்த வலைத்தளங்களில் உள்ளன என்பதை தேடிப் பட்டியலிடும் மென்பொருளையே தேடற் பொறி எனப்படுகிறது. உதாரணம் : கூகில், யாஹூ, பிங்
Sub Domain: டொமேன் பெயரில் ஒரு பகுதியே சப் டொமேன் எனப்படுகிறது. உதாரணமாக madeena.sch.lk, என்பதில் sch என்பது பிரதான டொமேன் எனவும் madeena என்பது சப்டொமேன் எனவும் அழைக்கப்படுகிறது.
Spam எமக்குத் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து நாம் கேட்காமலேயெ எமது மின்னஞ்சல் முகவ்ரிக்கு வந்து சேரும் வேண்டாத (குப்பை) மின்னஞ்சல்களையே ஸ்பாம் எனப்படுகிறது.

Top-level domains: டொமேன் நேம் சிஸ்டம் எனப்படும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையில் ஒரு பிரதான பிரிவே டொப் லெவல் டொமேன் எனப்படுகிறது. உதாரணம் .com, .gov, .edu.

Uniform Resource Locator (URL): உலகலாவிய வலைத் தளத்தில் உள்ள ஒரு ஆவணத்தின் முகவரியைக் குறிக்கிறது. இதனையே வெப் எட்ரஸ் எனவும் அழைக்கப்படுகிறது. உதாரணம்

Upload இணையத்தில் அல்லது வலையமைப்பொன்றில் ஒரு கணினியிலி ருந்து மற்றுமொரு கணினிக்கு பைல் ஒன்றை அனுப்புவதை அப்லோட் எனப்படுகிறது..
World Wide Web ஹைப டெக்ஸ்ட் ஆவணங்களையும் தரவுத் தளங்களையும் கொண்ட இணைய சேர்வர்களையே வேர்ல்ட் வைட் வெப் (உலகலாவிய வலத்தளம்) எனப்படுகிறது. இது 1989 ஆம் ஆண்டு Tim Berners-Lee, எனும் பிரித்தானியரால் வடிவமைக்கப்பட்டது.

Website : HTML எனும் வலை மொழி கொண்டு உருவாக்கிய, ஹைபடெக்ஸ்ட் ஆவணத்தையே இனையதளம் (வெப்சைட்) எனப்படுகிறது. இந்த ஆவணம் ஒரு நிறுவனம் சார்ந்த அல்லது தனி நபர் சார்ந்த அல்லது ஏதோவொரு விடயம் சார்ந்த தகவல்களைக் கொண்டிருக்கும். இது ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்களையோ (web pages) கொண்டிருக்கும் இவை ஹைபலிங் கொண்டு இணைக்கப்பட்டிருக்கும். இதனை இணையத்தில் இணைந்திருக்கும் ஒரு வெப் சேர்வரில் சேமிக்கப்படும். அந்த இணைய தளத்திற்கெனப் பதிவு செய்யப்படும் பெயரைக் கொண்டு (வெப் எட்ரஸ்) கொண்டு அந்த தளத்தை உலகின் எப்பாகத்திலிருந்தும் அணுகலாம்.

 

blogger templates | Make Money Online