Showing posts with label போட்டோஷாப். Show all posts
Showing posts with label போட்டோஷாப். Show all posts

Thursday, February 18, 2010




போட்டோஷாப் பாடம்-14 Pattern Images
இன்றைய பாடத்தில் Pattern image பற்றி பார்க்கலாம். Pattern image ஆனது ஒரு படத்தில் குறிப்பிட்ட இடத்தை – குறிப்பிட்ட நபரை தேர்வு செய்து அதை அதிக எண்ணி்க்கையில் சுலபமாக நிரப்ப நமக்கு உதவுகின்றது.அதற்கு நாம் மானையும் மயிலையும் எடுத்துக்கொள்ளலாம். முதலில் மான் படத்தை எடுத்துக் கொண்டுள்ளேன்.

இதன் image அளவு அகலத்தில்

6.667 மற்றும் உயரத்தில்

8.889 அங்குலத்தில் உள்ளது.

இதில் அதன் முகம் மட்டும்

நான் தேர்வு செய்துள்ளேன்.

முன்பே பாடத்தில் சொன்னது போல் மார்க்யு டூலால் கட் செய்து கொள்ளுங்கள். பின்னர் Ctrl+N-ஐ அழுத்தி பின் Enter தட்டுங்கள். உங்களுக்கு புதிய விண்டோ ஓப்பன் ஆகியிருக்கும். அதில் கட் செய்த மானை பேஸ்ட் செய்யுங்கள்.

உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும். இனி பழைய படத்தை முடி விடுங்கள். இப்போது ஸ்கீரினில் தலை மட்டும் உள்ள மான கிடைக்கும். அதன் இமேஜ் அளவை அகலம் 2 அங்குலம் உயரம் 3 அங்குலம் என மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு கீழ் கண்டவாறு படம் கிடைக்கும்.

இதை அப்படியே விட்டுவிட்டு இப்போது மேல்புறம் உள்ள Edit கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்  ஆகும்.

அதில் உள்ள Define Pattern கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

ஓகே கொடுங்கள். இப்போது நீங்கள் கொடுத்துள்ள Standard அளவின் படி புதிய விண்டோ ஓப்பன் செய்யுங்கள். நான் அகலத்தில் 10 அங்குலமும் உயரத்தில் 12 அங்குலமும் வைத்து புதிய விண்டோ ஓப்பன் செய்துள்ளேன். இனி நீங்கள் Shift + F5 அழுத்துங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் Use எதிரில்உள்ள கட்டத்தில் Pattern தேர்வு செய்து பின் Custom Pattern எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு மேலே உள்ளவாறு ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் தேர்வு செய்த மானின் படம் முதலில் இருக்கும். அந்த படத்தை தேர்வு செய்து ஓ,கே. கொடுங்கள். கண் இமைக்கும் நொடியில் என்ன நடக்கின்றது என பாருங்கள்.

ஒரு மான் பாருங்கள் - 20 மானாக வந்து விட்டது. இதைப்போல்
இந்த மயிலை பாருங்கள்.

மயிலின் அளவு கீழே கொடுத்துள்ளேன்.

இதில் மயிலின் முகம் மட்டும் கட் செய்துள்ளேன்.

வேண்டிய அளவிற்கு படத்தின் இமேஜை

குறைத்துள்ளேன். படம் கீழே..

இதையும் Edit -Define Pattern -O.K. கொடுத்தேன். புதிய விண்டோ ஓப்பன் செய்தேன். அதில் மானை நிரப்பியவாறு மயிலையும் நிரப்பினேன். படத்தை பாருங்கள்.

பாடத்தை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்

Magnetic Lasso Tool

போட்டாஷாப்பில் சென்ற பாடங்களில் Lasso Tool பற்றி பார்த்தோம். இன்று அதே Lasso Tool-ல் மூன்றாவதாக
உள்ள Magnetic Lasso Tool பற்றி பார்க்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.


இதுவும் படத்தை தேர்வு செய்ய பயன்படுகின்றது.ஒரு
படத்தில் உள்ள பல வளைவுகளை தேர்வு செய்வது சற்று
சிரமம். அதற்கு நீங்கள் இந்த டூலை பயன்படுத்தலாம்.
பெயருக்கு ஏற்றார்போல் இந்த டூலை நீங்கள் படத்தின்
அருகில் கொண்டு செல்லும் சமயம் படத்தின் ஓரத்தை
இந்த டூலே தேர்வு செய்துகொண்டுவிடும்.

கீழே உள்ள இந்த பூவின் படத்தை பாருங்கள்.

இப்போது பூவின் ஓரம் கர்சரை கொண்டு செல்லும் சமயம் படத்தின் ஓரத்தில் அதுவே தேர்வு செய்வதை காணலாம்


இப்போது படத்தின் ஓரங்கள் முழுவதும் கர்சரை கிளிக் கொண்டு செல்ல படம் முழுவதும் தேர்வு செய்யலாம்

இப்போது கட் செய்தபின் வந்துள்ள படம் கீ்ழே:-

இதனை சுற்றி உள்ள் இடத்தை வண்ணம் கொண்டு நிரப்ப வந்துள்ள படம் கீழே:-

அதைப்போல் ஒரு பறவையையும் தேர்வு செய்துள்ளேன். படம் கீழே:-

இந்த Magnetic Lasso Tool-ல் மற்றும் ஓரு வசதியும் உள்ளது.
கீழே உள்ள Option Bar கவனியுங்கள்

இதில் உள்ள Feather-ல் வேண்டிய பிக்ஸல்கள் தரலாம்.
இதில் உள்ள Width என்பது காந்த தன்மையின் அளவை குறிக்கும்.
இதை 10 என்று வைத்தால் Mouse-ன் கர்சர் உள்ள இடத்தில் இருந்து
10 pixel கள் இடைவெளி வரை உள்ள் படத்தின்
Border-ஐ இந்த டூல் புரிந்து கொள்ளும்.படத்தில் பல
வளைவுகள் இருந்தால் இந்த மதிப்பை குறைவாக
வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக தலையின் முடியை
தேர்வு செய்யும்சமயமும், விலங்குகளின் வாலை தேர்வு
செய்யும் சமயமும் இது மிகவும் பயன்படும்.
இதில் கடைசியாக உள்ள Frequency என்பது நாம்
இந்த டூல் கொண்டு வரையும்சமயம் தோன்றும்
புள்ளிகளின் நெருக்கத்தைக் குறிக்கும்.இந்த
புள்ளிகளை Fasteing Point என்று கூறலாம்.
இதில் உள்ள Edge Control என்பது உருவத்தில்
உள்ள Contrast நிறத்தை இந்த டூல் அறியும். அதிக
Contrast உள்ள இடங்களை அறிந்து கொள்ள இந்த
எண்ணை அதிகமாக கொடுக்கவும். இந்த டூல்
கொண்டு படத்தை வரைந்து முடித்துவிட்டபின்
கர்சரின் டபுள் கிளிக் செய்தோ அல்லது என்டர்கீ
யை அழுத்தி யோ முடிக்கலாம்.Magnetic Lasso Tool
கொண்டு படத்தை தேர்வு செய்யும் சமயம் நாம்
Lasso Tool க்கு மாற Alt Key அழுத்தி பின் கிளிக்
செய்யலாம். மீண்டும் பழையபடி நமக்கு Magnetic
Lasso Tool தேவைபட்டால் நாம் Alt Ket-ஐ
விட்டு விட Magnetic Lasso Tool வந்துவிடும்.
அடுத்த பதிவில் சந்திக்கலாம்



போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்

போட்டோஷாப் Polygonal Lasso Tool

போட்டாஷாப்பில் சென்ற பதிவில் Lasso Tool
பற்றி பார்த்தோம். இன்று Polygonal Lasso Tool பற்றி
பார்க்கலாம். இது மூன்றாவதாக உள்ள Lasso Tool-ல்
உள்ள உப டூல்ஆகும். Lasso Tool மூலம் படத்தை
சுற்றி மொத்தமாக தேர்வு செய்தால் இந்த
Polygonal Lasso Tool மூலம் ஒரு படத்தில் உள்ள
வளைந்துள்ள படத்தையே தேர்வு செய்யலாம்.
ஒரு கார் படம் இருக்கின்றது. அந்த காரை மட்டும்
தேர்வு செய்யவேண்டும். இந்த டூல் உபயோகப்படும்.
சரி இப்போது கீழே உள்ள படத்தை பாருங்கள்.



இப்போது Polygonal Lasso Tool தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்போது நான் கீழே உள்ள படத்தை தேர்வு செய்துள்ளேன்.

இப்போது இந்த பட்டாம்பூச்சியை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த டூல் மூலம் பட்டாம்பூச்சியை கட் செய்யுங்கள்.


ரைட் . இப்போது பட்டாம் பூச்சி நடுவில் வைத்து ரைட் கிளிக்
செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும். அதில் உள்ள Select Inverse கிளிக் செய்யுங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.



இப்போது படத்தை பாருங்கள். படத்தை சுற்றி உள்ள
இடங்களில் தேர்வு செய்துள்ளதை பாருங்கள்.

இப்போது டெலிட் கீ யை அழுத்துங்கள்.இப்போது உங்கள்
Backround Color -நடுவில் படம் தேர்வாகிஉள்ளதை பாருங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள். பட்டாம் பூச்சி மட்டும்
தனியாக தேர்வாகிஉள்ளது. இதை வேண்டிய இடத்தில்
நாம் பொருத்திக்கொள்ளலாம்.

இரண்டு மூன்று முறை முயற்சி செய்யுங்கள். சரியாக வரும். அடுத்த பதிவில் சந்திக்கலாம்
































போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்

போட்டோஷாப் பாடம் Magic Wand Tool
இன்றைய போட்டோஷாப் பதிவில் Magic Wand Tool பற்றி பார்க்கலாம்
முதலில் ஏதாவது ஒரு படத்தை திறந்து இந்த டூலை
கிளிக் செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் நீக்க
வேண்டிய நிறத்தை தேர்வுசெய்துகொள்ளுங்கள்.
இப்போது இதன் மேல்புறம் உள்ள Options Bar -ல்
உள்ள Tolerance -ஐ நீங்கள் எவ்வளவு வைக்கின்றீர்களோ
அந்த அளவிற்கு நிறத்தை தேர்வு செய்யும். இனி வரும்
பாடங்களில் இந்த டூல் மூலம் என்னவெல்லாம்
செய்யலாம் என விரிவாக பார்க்கலாம்.


இப்போது போட்டாஷாப்பில் பல வண்ண நிறங்களை
தேர்வு செய்துள்ளேன். இதில் நாம் முதலில் சிகப்பு
நிறத்தை தேர்வு செய்யலாம். Tolerance -சுமார் 25 வைத்துள்ளேன்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.

சிகப்பு நிறம் மட்டும் சரியாக தேர்வாகிஉள்ளது. அதே டூல்
கொண்டு Tolerance -50 ஆக தேர்வு செய்தபோது வரும்
படத்தை கீ்ழே பாருங்கள்.

இதைப்போலவே Tolerance 75 வைத்த படம் கீழே:-

சுமார் 100 வைத்து தேர்வு செய்த படம் கீ்ழே:-

இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன வென்றால்
ஒரு நிறத்தை தேர்வு செய்யும் சமயம் குறைவான அளவு
Tolerance வைத்தால் அந்த நிறம் எங்குஉள்ளதே அதுமட்டும்
தேர்வாகும். Tolerance அதிகமாக வைக்கும் சமயம்
நாம் தேர்வு செய்யும் நிறத்தை சார்ந்துள்ள நிறமும் தேர்
வாகும். உதாரணத்திற்கு இங்கு தஞ்சாவூர் கோயிலின்
பின்புறம் உள்ள வானத்தின் நிறத்தை தேர்வு செய்து டெலிட்
செய்தபின் Backround கலராக நீங்கள் எதை தேர்வு செய்து
உள்ளீர்களோ அந்த நிறம் வந்துவிடும்.கீழே உள்ள
படத்தை பாருங்கள்.

பின்புற நிறம் நீல கலரை தேர்வு செய்துள்ளேன். படம் கீழே:-

தைப்போல் கோபுரத்தின் பின்புறம் நிறம் மஞ்சள் நிறம் மாற்றி
உள்ளேன்.படம் கீழே:-

படம் கீழே:-











போட்டோஷாப் Magic Wand Tool -தொடர்ச்சி
போட்டோஷாப் பாடத்தில் சென்ற வாரம்Magic Wand Tool
பற்றி பார்த்தோம்.அதன் தொடர்ச்சியை இந்த வாரம்
பார்க்கலாம். நான்சாதாரணமாக இந்த புகைப்படத்தை
எடுத்துள்ளேன்.

இந்த பெண்ணின் பின் புறம் ஒரு ஏரியோ ஆறோ உள்ளது.
அதில்தூரத்தில் படகும் செல்வதை காணுங்கள். இப்போது
(Magic Wand Tool ) டூல் கொண்டு
இந்த தண்ணீரை கிளிக் செய்து டெலிட் அழுத்தியதும்
உங்கள் பின்புற கலர் நிறத்துடன்(நான் Backround Color
வெள்ளைநிறம் வைத்துள்ளேன்) படம் இந்த மாதிரி தேர்வாகும்.

இப்போது Layer-New Fill Layer - Pattern என
கீழ்கண்டவாறு தேர்வு செய்யுங்கள்.


உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் நீங்கள் Pattern ஆக எந்த படம் வைத்துள்ளீர்களோ
அதை தேர்வு செய்யுங்கள்.புகைப்படத்தை Pattern ஆக
மாற்றுவதை முன்பு பாடத்தில் பதிவிட்டுள்ளேன்.
தேவைப்படுபவர்கள் இங்கு கிளிக்
செய்துமுந்தைய பாடத்தை பார்த்துக்கொள்ளவும்.



நான் இந்த அருவியை Pattern ஆக தேர்வு செய்துள்ளேன்.


இப்போது உங்களுக்கு இந்த மாதிரி படம் வரும். இதில் உள்ள
ஸ்லைடரை நகர்த்துவது மூலம் நீங்கள் படத்தை ஒழுங்கு
செய்துகொள்ளலாம்.அல்லது மூவ் டூல் கொண்டு படத்தை
வேண்டிய இடத்தில் நகர்த்திக்கொள்ளலாம்.


இப்போது அந்த பெண்ணின் பின்உள்ள ஆறு ஆனது
அழகிய அருவியின் பின்புலமாக மாறுவதை காணலாம்.

ஸ்லைடரை ஒழுங்காக நகர்த்தியபின்வந்த படம்
கீழே:-

மற்றும் ஒரு அருவியின் பின்புலத்தில் கொண்டுவந்த படம்
கீழே:-

அவ்வளவுதாங்க. ரொம்ப சிம்பிளாக இருக்கு இல்ல...நீங்களும்
உங்களுடைய புகைப்படத்தை பின் புறம் உள்ள நிறத்தை
நீக்கி விட்டு வேண்டிய படத்தை வைத்துக்கொள்ளுஙகள்.







 

blogger templates | Make Money Online